2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

அமைச்சர் நிமல் பதவியைத் துறந்தார்

Editorial   / 2022 ஜூலை 06 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான சேவைகள் அமைச்சுக்கும் தனியார் நிறுவனமொன்றுக்கும் இடையில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியின் உத்தரவு பிறப்பிடத்துள்ளார்.

விமான சேவைகள் அமைச்சு தனியார் நிறுவனம் ஒன்றுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (05) பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக முறையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைகள் முடியும் வரை ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கு  நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார் என ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .