Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 16 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில், அரசாங்கத்திற்கு யோசனை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறான அறிவிப்பை விடுத்தார்.
வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வெளிநாட்டு நாணயத்தை மாத்திரமே பயன்படுத்தி இறக்குமதி செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. “எனவே, முடிந்தால் வெளிநாட்டு நாணயத்தில் வாகனங்களை
இறக்குமதி செய்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது.
வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த ஒரு முறையை உருவாக்க
முடிந்தால், அந்நிய செலாவணி அதன் வழியாக நாட்டிற்கு கொண்டு
வர முடியும். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்போம்
என நம்புகின்றோம்” என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.
9 hours ago
19 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Feb 2026