2022 ஜனவரி 20, வியாழக்கிழமை

ஆயுத கடத்தலுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பு: உதவி கோருகிறது இந்தியா

Niroshini   / 2021 ஒக்டோபர் 13 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் கடத்தலில் ஈடுபட்டுள்ள தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மீதான விசாரணையை முன்னெடுப்பதற்கு, இலங்கை அரசாங்கத்தின் உதவியை நாட இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ், சந்தேக நபர்கள் குறித்த தகவல்களைப் பெறுமாறு, அந்த நிறுவனம் இலங்கை அராங்கத்துக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதம், பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்த முற்பட்ட ஆயுதங்கள் மற்றும் ஹெரோய்ன் ஆகியவற்றுடன் மீன்பிடி கப்பலுடன் ஆறு இலங்கையர்கள், இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவரும் மூன்று இலங்கையர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறான கட்டத்தல்கள் மூலம் பெறப்படும் பணத்தை, புலிகள் அமைப்பை புத்துயிர் அளிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் மற்றொரு புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரும் தொடர்புபட்டிருப்பதாகவும், இந்திய புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி, தற்போது இலங்கையில் இருப்பதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை வழங்குமாறு, இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவு, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் வினவிய போது, இது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு  விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X