2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

’சிறுவர் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு’

Nirosh   / 2021 ஜூலை 27 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய, நாளாந்தம் 5 சிறுவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி லேடி ரிச்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், இரு வாரங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு ஒரு சிறுவரே தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தற்போது இந்த எண்ணிக்கை ஐந்தைவிட அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தாய்மார்களும் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதோடு, நாளாந்த 8 - 10 வரையிலான தாய்மார்களும், சிறுவர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .