2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

எரிவாயு விபத்துக்கள் இவ்வாரத்துக்குள் அறிக்கை

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 01 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எரிவாயுக் கசிவுகளால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பான தரப் பகுப்பாய்வு குறித்த நிபுணர்களின் அறிக்கை, இந்த வாரத்துக்குள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிடம் கையளிக்கப்படும் என, மொரட்டுவை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கை, நான்கு பேர்  கொண்ட குழுவினால் தொகுக்கப்பட்டு வருவதாக, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயல்முறை பொறியியல் துறையின் பேராசிரியர் சாந்த வல்பொல தெரிவித்தார்.வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களில் ஏற்பட்ட கசிவுகள் தொடர்பான வெடிப்புகளைத் தொடர்ந்து,
நுகர்வோர் விவகார அதிகாரசபை, சமீபத்தில் ஆறு மாவட்டங்களில் இருந்து எரிவாயு மாதிரிகளை பரிசோதனைக்காகப் பெற்றுள்ளது.

இவற்றில் 12 மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அண்மையில் பல பகுதிகளில் எரிவாயு கசிவுகள் தொடர்பான பல சம்பவங்கள் பதிவாகியிருந்ததோடு, கடந்த நவம்பர் மாதம் 20ஆம் திகதி கொழும்பு, ரீட் அவென்யூவில் உள்ள ரேஸ் கோர்ஸ் கட்டடத்தின் தரைத் தளத்தில் அமைந்துள்ள சர்வதேச உரிமையாளருக்கு சொந்தமான உணவகத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தை அடுத்து இந்த பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. அரசாங்கப் பகுப்பாய்வாளரின் ஆய்வுகளைத் தொடர்ந்து,
வெடிப்புக்கான மூல காரணம் எரிவாயுக் கசிவு என்பது தெரியவந்தது.இந்த பின்னணியில்,
அண்மைய சமையலறை வெடிப்புகளுக்கு எரிவாயு நிறுவனங்களே காரணம் என நுகர்வோர்
விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன
தெரிவித்துள்ளார். உள்நாட்டு சிலிண்டர்களின் புறொபேன் மற்றும் பியூட்டேன் விகிதத்தில்
ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாக இந்த சம்பவங்கள் நடந்ததாக அவர் குற்றம்
சாட்டினார்.இதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் எரிவாயுக் கசிவுடன் தொடர்புடைய 16
வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X