2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தம்

S.Sekar   / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறு அறிவித்தல் வரை நாடாளவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும், கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் சுமார் 20 சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலை இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (02) முதல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

எவ்வாறாயிலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவும் லாவ்ஸ் காஸ் நிறுவனம் சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் எவ்விதமான அறிவித்தல்களையும் இதுவரை வெளியிடவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .