Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் உள்ளக பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு பொறிமுறைகள் எதுவும்
தேவையில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, அவ்வாறானதொரு பொறிமுறையை உருவாக்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அதிகாரம் எதுவும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் உள்ளக நீதி கட்டமைப்புக்குள் நாட்டின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு உள்ளது என்றார்.
ஜனாதிபதி ஊடக மைய்யத்தில் நேற்று(16) இடம்பெற்ற ஜெனீவா குற்றசாட்டு, ஐக்கிய
நாடுகளின் யோசனை மற்றும் இலங்கையின் வெளிநாட்டு கொள்கை தொடர்பில் இடம்பெற்ற
தெளிவுப்படுத்தல் ஊடகச் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், மனித உரிமைகளைப் பாதுகாப்பது, நல்லிணக்கத்தை பேணுவது மற்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பது போன்ற அரசாங்கத்தின் பொறுப்பு குறித்து ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவை மகிழ்ச்சி வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் மனித உரிமைகள் பேரவையின்
செயற்பாட்டை, சீனா, ரஷ்யா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஈராக்,
வெனிசுவேலா உள்ளிட்ட 15 நாடுகள் கைகளை கோர்த்து எதிர்ப்பதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்,ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்
பேரவையில் விசேடமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை வழங்கப்பட
வேண்டும் என சில மதத் தலைவர்கள் எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் குறிப்பிட்டதாகத் தெரிவித்த ஜயநாத் கொலம்பகே, அந்த உரையில் மற்றுமோர் இடத்தில் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாக
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுள் சிலர் விடுதலை செய்யப்பட வேண்டும் என தெரிவித்ததாகக்
குறிப்பிட்டதுடன்,எனவே இது ஒரே கதையின் இரட்டை நிலைப்பாடு என்றார்.
11 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
2 hours ago