2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

இரண்டு பரீட்சைகளை நடத்துவதில் சிக்கல்

Ilango Bharathy   / 2021 ஜூன் 16 , மு.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பரவியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக, பாடசாலைகள் யாவும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில், 2021 கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதில் தாமதம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.



சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்தி பரீட்சையை நடத்தும் தினம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்று நிலைமை காரணமாக 2020 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழி வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சாதாரணதர பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளை நடத்தும் தீர்மானம் தொடர்பில் இன்று 16) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண கல்விப் பணிப்பாளர்கள், அழகியல் துறைசார் பணிப்பாளர்கள், பரீட்சைகள் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.

இதனிடையே, 2020 க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X