2022 மே 20, வெள்ளிக்கிழமை

மீரிகம நுழைவாயிலில் போக்குவரத்து நெரிசல்

Freelancer   / 2022 ஜனவரி 17 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் குருநாகலிலிருந்து மீரிகம வரை பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை இன்று (17) பிற்பகல் அதிகரித்ததையடுத்து, ஐந்து ஒழுங்கைகளால் வாகனங்களை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலைமை காரணமாக மீரிகம நுழைவாயிலில் இருந்து வெளியேறுவதற்காக காத்து நின்ற வாகனங்களின் வரிசை மதுருபிட்டிய மா ஓயா எல்லை வரை காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரிகம நுழைவாயிலை 15 முதல் 20 நிமிடங்களுக்குள் சென்றடைந்த போதிலும், நுழைவாயிலில் இருந்து வெளியேற சுமார் 45 நிமிடங்கள் வரை எடுத்தாக சாரதிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .