2021 டிசெம்பர் 04, சனிக்கிழமை

கறுவாத் தோட்டத்தில் மரணமான காதல் ஜோடி

Freelancer   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலன்ன, பிட்டவெலவில் பயிர்ச்செய்கை நிலத்தில் போடப்பட்டிருந்த மின் கம்பியை தற்செயலாக மிதித்த இளம் காதல் ஜோடி, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒன்லைன் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த சூரஜ் பிரசன்ன (26) மற்றும் டிக்வெல்லயைச் சேர்ந்த ஹன்சிகா சந்தமாலி (17)  ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இளம் ஜோடியின் உடல்கள், இளம்பெண்ணின் உறவினர் ஒருவருக்கு சொந்தமான கறுவாத் தோட்டத்தில் இருந்து நேற்று காலை மீட்கப்பட்டதாகத் தெரிவித்த கொலன்ன பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X