2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

இரண்டு மாதங்களில் மருந்து தட்டுப்பாடு நீங்கும்

Freelancer   / 2022 ஜூலை 07 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பா.நிரோஸ்

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.  2023 ஆம் ஆண்டு  இறுதிவரைக்கும் மருந்து பொருட்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (6) பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது, மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத்தினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதலிளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் டொலர் தட்டுப்பாடே மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான பிரதான காரணமாகும். என்றாலும் எமது நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஊடாக  75மில்லியன் டொலர் பெருமதியான மருந்துகளை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.  

அதேபோல்  31மில்லியன் டொலருக்கான சுகாதார சேவையுடன் தொடர்பான நன்கொடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 
உலக வங்கியின் ஊடாக 73மில்லியன் டொலரும், ஆசிய அபிவிருத்தி வங்கியின்  ஊடாக 66மில்லியன் டொலரும் இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் 200மில்லியன் டொரும் ஆசிய அடிப்படை வசதிகள் முதலீட்டு வங்கியின்  மூலம் 100 மில்லியன் டொலர் என மருந்து பொருட்களுக்காக கடன் உதவிகள் எமக்கு கிடைக்கவுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .