2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

‘உள்ளக ஜனநாயகம் எமது கட்சியில் உள்ளது’

Ilango Bharathy   / 2021 ஜூன் 16 , மு.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

எம் கட்சியைத் தவிர வேறெந்தக் கட்சியிலும் உள்ளக ஜனநாயகம் இல்லையெனத் தெரிவித்த
அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, உள்ளக ஜனநாயகம்
இன்மையால் இலங்கையின் பிரபல கட்சியொன்று அடியோடு காணாமலேயே சென்று விட்டது.
அதுவே சிறந்த உதாரணமாகும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்து தெரிவித்த அவர், எமது அரசாங்கம் பொறுமையான அரசாங்கமாகும். எனவே, எவர் மீதும் உள்ள கோபத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை என தெரிவித்த அவர், இந்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முகாமைத்துவம் செய்யும் போது, இவ்வாறு விலையேற்றம் அவசியமாகும் என்றார்.

சில தீர்மானங்கள் எம்மை மகிழ்ச்சிப்படுத்தாத தீர்ப்பாக அமைய முடியும். சில நேரங்களில்
அசெளகரியமான தீர்மானங்களை எடுக்க நேரிடும். அந்த அசௌகரியமான தீர்மானமாகவே
தான் இதனை கருதுகிறேன் என்றார்.

இதன் பொறுப்பை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். பொறுப்பேற்ற பின்னர், மக்களிடம்
ஏற்படும் அபிப்ராயங்களுக்கு செவிசாயக்க வேண்டும். ஆனால், அந்த உள்ளக ஜனநாயகத்தில் சில எல்லைகளை நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் எல்லை மீறப்படுமானால் நாம் கட்சி என்ற ரீதியில் ஒன்றிணைந்து
கலந்துரையாட வேண்டுமே தவிர, வீதிக்கு இறங்கி அது குறித்து கலந்துரையாடக் கூடாது.

“11 கட்சிகள் இணைந்து ஒரு குடையின் கீழ் செயற்படும் போது அவர்களின் அபிப்ராயங்களை
முன்வைக்கும்போது, அவர்களது மனம் கோணாத வகையில் தீர்மானங்களை முன்னெடுப்பதே
உள்ளக வேலைத்திட்டமாகும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X