Ilango Bharathy / 2021 ஜூன் 21 , மு.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்ற தனிச் சிறையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள், தங்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, நேற்று (20), 12ஆவது நாளாகவும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
இதன்போது, அவர்கள், தமிழக முதல்வர் மு.க ஸ்டலினி்ன் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரின் ஓவியம் மற்றும் படத்தைத் தாங்கியவாறு, நேற்றைய போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்காத நிலையில் தொடர்ச்சியாகப் போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள அவர்கள், இன்றையதினம் (21) தமிழக சட்ட சபை கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஒரு தீர்வை, முதலமைச்சர் வழங்குவார் என்று எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

5 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
03 Nov 2025