Simrith / 2023 ஜூன் 01 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் 111 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
”மூன்று மாதங்களுக்கு முன்னர் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. அது தற்போது 111 ஆக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அந்த எண்ணிக்கை 70 ஆகக் குறைவடையும்” என அமைச்சர் தெரிவித்தார்.
மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யப் போதுமான நிதி உள்ளதா எனக் கேட்ட போது ” இலங்கை கடந்த வருடத்திலிருந்து கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத விடயம். நாம் இப்போது அதை சரிசெய்து கொண்டு இருக்கின்றோம். இந்நிலையில் நிதியை விடுவிப்பதில் சிறு சிக்கல்கள் இருக்கின்றன. இருந்தாலும் திறைசேரியிலிருந்து மருந்துக் கொள்வனவுக்குப் போதுமான நிதியைப் பெற்று வருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.
19 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
2 hours ago