2023 ஜூன் 07, புதன்கிழமை

ஹோட்டல் அறைகளின் கட்டணம் திடீர் உயர்வு

Freelancer   / 2022 ஜனவரி 17 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதால் ஹோட்டல்கள் மற்றும் அறைகளின் கட்டணங்கள் அதிகரித்துள்ளாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.

தங்காலையில் உள்ள குறிப்பிட்ட சில ஹோட்டல்களில் ஒரு இரவுக்கான அறைக் கட்டணம் 50,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது என்றார்.
 
இந்த வருடத்தில் இன்றுடன், மொத்தமாக 46,942 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ள நிலையில் தினமும் கிட்டத்தட்ட 3,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக குறிப்பிட்டார்.

அவர்களை அழைத்து வருவதற்கு கிட்டத்தட்ட 22 விமான நிறுவனங்கள் தற்போது இயங்கி வருவதாகவும் பல விமான நிறுவனங்கள் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர இணங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் அறைகளின் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். 

ரஷ்யாவில் இருந்து 9,866 பேர், பிரித்தானியாவிலிருந்து இருந்து 4,697 பேர், உக்ரைனில் இருந்து 4,241 பேர், இந்தியாவில் இருந்து 3,784 பேர், நெதர்லாந்தில் இருந்து 3,737 பேரும் என குறிப்பாக மேற்குறிப்பிட்ட ஐந்து நாடுகளிலில் இருந்தே அதிகவான வெளிநாட்டவர்கள் வருகை தந்துள்ளனர் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .