2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 17 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமியுடன் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு கண்டு, நல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அதுமட்டுமன்றி, வடக்கு  ,கிழக்கு மாகாணங்களின் இந்திய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படக்கூடிய கூட்டு முயற்சிகள்  கிராமிய அபிவிருத்தி, மற்றும் விவசாயம், கைத்தொழில் சார் முதலீடு மற்றும் கால்நடை துறைசார் மேம்பாடு  உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான கலந்துரையாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .