2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

சமையல் எரிவாயு விலை; அதிரடி தீர்மானம்

J.A. George   / 2021 ஜூன் 21 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐவரடங்கிய அமைச்சரவை உப-குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எரிவாயு விலையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அண்மையில் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையில் யோசனை முன்வைத்திருந்தார்.

எனினும், அந்த யோசனை நிராகரிக்கப்பட்டதோடு இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்வதற்காக குறித்த அமைச்சரவை உப-குழு நியமிக்கப்பட்டது.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் குழுவில் அங்கம் வகித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .