2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

வானத்தை நோக்கி சுட்டு வாளைப் பிடுங்கினர்

Editorial   / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில், மது போதையில் அட்டகாசம் புரிந்த இளைஞன்
ஒருவரை, மேல் வெடி வைத்து, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில், செபஸ்ரியன் வீதி பகுதியில் உள்ள
வீடொன்றில், நேற்று (28), மது போதையில் இளைஞன் ஒருவர், தாய் மீதும் வீட்டிலிருந்தோர்
மீதும் தாக்குதல் நடத்தி, அட்டகாசம் புரிந்துள்ளார்.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அயலவர்கள் தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ
இடத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த இளைஞனை கைது செய்ய முயற்சித்துள்ளனர்.
எனினும், அவ்விளைஞன் வீட்டில் இருந்த வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு, பொலிஸார் மீது
த் தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்துள்ளார்.

அதனையடுத்து பொலிஸார் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களை தீர்த்து, இளைஞனை
மடக்கி பிடித்து, கைதுசெய்துள்ளனர். அத்துடன், இளைஞனிடம் இருந்த வாளையும்,
பொலிஸார் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக
விசாரணகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X