Janu / 2023 மே 30 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
க. அகரன்
வவுனியா சமளங்குளம் பகுதியில் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீடொன்றினுள் புகுந்து இருவரை கொலை செய்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
வவுனியா சமளங்குளத்தில் 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்த இருவரை சுட்டுக்கொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட 24 வயது நபரொருவருக்கெதிராக 11 குற்றச்சட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்றத்தில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது 38 வயதாகும் குறித்த நபருக்கு இன்றைய தினம் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன், 9 குற்றச்சாட்டுகளுக்கு 16 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் 10,000 ரூபாய் தண்டமும் விதித்தார்.
தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் இரண்டு மாதம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்த நீதிபதி 10 ஆம் மற்றும் 11 ஆம் குற்றச்சாட்டுகளுக்கு மரணதண்டனையும் வழங்கி தீர்ப்பளித்திருந்தார்.
5 minute ago
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
1 hours ago