2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

’உரப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு அவசியம்’

Nirosh   / 2021 ஜூன் 17 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடுமுழுவதிலும் ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாடுக் காரணமாக விவசாயிகள் பாரியப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவையில் பல அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உரப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுக் காணப்படவில்லை என்றால் பாரதூரமானப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுமெனவும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி காரியாலயத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பிலேயே அமைச்சர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு, உர பிரச்சினையை எதிர்நோக்கும் விவசாயிகள் அமைச்சர்களை சந்தித்து தங்களதுக் பிரச்சினைகளைக் கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரண, ஜனக பண்டார தென்னகோன், மஹிந்த அமரவீர, வாசுதேவ நாணயக்கார, எஸ்.எம். சந்திரசேன ஆகிய அமைச்சர்கள் உரப் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடி உள்ளனர்.

உரப் பிரச்சினை தொடர்பில் அமைச்சர்களுக்குப் பதிலளித்த அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கம, நாட்டுக்குத் தேவையான உரம் நாட்டுக்குள் இருப்பதாகவும், சந்தைகளை உரங்களைப் பதுக்கி வைத்திருப்பதாலேயே நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .