Freelancer / 2023 மார்ச் 30 , பி.ப. 01:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பந்தோட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் ஒன்றில் 12 வயதான சிறுமி பாடசாலைக்கு வருவதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த போது சிறுமியை காரில் விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அதே பாடசாலையில் ஆசிரியர் ஒருவறை ஹம்பந்தோட்டை துறைமுக பொலிஸாரால் நேற்று (29) கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்ட ஆசிரியர் 39 வயதானவர் என்றும் அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேக நபரின் மனைவியும் ஆசிரியையாவார்.
தான் ஆசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி பொலிஸாரிடமோ அல்லது அவரது தாயாரிடமோ கூறவில்லை. ஆசிரியருடன் ஏற்பட்ட காதல் உறவே இதற்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 28ம் திகதி சந்தேநபரான ஆசிரியர் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்து சிறுமியை தனது காரில் ஏற்றிக்கொண்டு விடுதிக்கு சென்றுள்ளார். அதன் பின்னர், பாடசாலை அருகே மீண்டும் இறக்கிவிட்டு சென்றதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மகள் வீட்டுக்கு வர தாமதமானதால் தாயார் பாடசாலைக்கு வந்ததாகவும் மகள் பாடசாலையில் இல்லாததால் அதிபருக்கு தகவல் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் சிறுமி வீட்டுக்கு செல்லும் வழியில் பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்துள்ளார்.
தென் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிபர் . அஜித் ரோஹனவின் பூரண மேற்பார்வையின் ஹம்பந்தோட்டை மாவட்டத்திக்கு பொருப்பான பிரதி பொலிஸ் அதிபர் மகேஷ் சேனாரத்னவின் கீழ் பொலிஸாரால் சந்தேகத்துக்கு உரிய ஆசிரியர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.
30 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
44 minute ago
1 hours ago
1 hours ago