2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

புதிய திரிபு நாட்டுக்குள் நுழையும் அபாயம்

Freelancer   / 2021 நவம்பர் 01 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தடுப்பூசிகளைத் தவிர்க்கக்கூடிய A.30 என்ற புதிய வகை கொரோனா திரிபு இலங்கைக்குள் நுழையும் அபாயம் இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம், இன்று (01) எச்சரித்தது.

வெளி நாடுகளில் முன்னர் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா திரிபுகளும் குறுகிய காலத்துக்குள் இலங்கையில் கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்ட சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, அவற்றைப் போலவே, இந்த மாறுபாட்டையும் நாட்டில் எந்த நேரத்திலும் கண்டறிக் கூடும் என்று குறிப்பிட்டார்.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் சுண்டிவிடப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த புதிய மாறுபாடு நாட்டுக்குள் நுழைந்து பரவத் தொடங்கினால், நிச்சயமாக ஒரு பேரழிவு சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனவே, சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய அவர், புதிய திரிபுகளை தள்ளி வைத்திருப்பதே ஒரே வழி  என்றார்.

இதேவேளை, புதிய கொரோனா வைரஸ் திரிபு தொடர்பில் இலங்கை மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .