2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

கொள்கை வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்

Freelancer   / 2023 ஜூன் 02 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்கும் தீர்மானத்தின் பிரகாரம், உரிமம் பெற்ற வங்கிகள் வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

மத்திய வங்கியின் நாணய சபை நேற்று முன்தினம் கூடிய போது, கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது.

இதற்கிணங்க, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வட்டி வீதம் 15 வீதத்திலிருந்து 13 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

துணை நிலை கடன் வழங்கலுக்கான வட்டி வீதத்தை 14 வீதத்திற்கும் 250 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கும் மத்திய வங்கியின் நாணயசபை தீர்மானித்துள்ளது.

அத்துடன், தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .