Ilango Bharathy / 2021 ஜூன் 17 , மு.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகங்களுக்குப் புரியவில்லை எனினும் மக்கள் நன்றாக விளங்கிக்கொள்வர் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான முன்னாள் எம்.பி, பாலித ரங்கே பண்டார, இன்றைய ஒன்று; நாளை அறுபதாகும். கொஞ்சம் காத்திருங்கள் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் வைத்து ஊடகங்களுக்கு நேற்று (16) தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்திருந்த தேசியப் பட்டியலை நிரப்புவதற்கான
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர், அடங்கிய ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் நேற்று (16) கையளிக்கப்பட்டன.
“இன்று ஒன்று; நாளை அறுபதாகும் என்பது மிகவும் இலகுவான
விடயமாகும். அரசாங்க மற்றும் எதிரணியினருடன் கலந்துரையாடல்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த அறுபதும் இன்னும் அதிகரிப்பதற்கு
வாய்ப்புகள் அதிகமே உள்ளன” என்றார்.
“வெறும் 42 உறுப்பினர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சிப்பீடமேறி,
அரசியலமைப்பில் திருத்தத்தையும் கொண்டுவந்து, வரவு- செலவுத்திட்டத்தையும் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள முடியுமெனில்,ஒன்றிலிருந்து பயணத்தை ஆரம்பித்து அவ்வளவு கடினமானது அல்ல” என்றார்.
14 minute ago
19 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
19 minute ago
32 minute ago