Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Ilango Bharathy / 2021 ஜூன் 16 , மு.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் இலங்கைப் பிரதிநிதியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு, சட்ட மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
குறித்த இலங்கை பிரதிநிதியை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று, விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் அப்பகுதிகளில் இருக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
கப்பலின் இலங்கைக்கான பிரதிநிதியை கைது செய்வதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, கப்பல் தீப்பற்றியதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் ஆகியவற்றின் உடற்கூற்று பரிசோதனைகளை முன்னெடுத்த வைத்தியரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் குழுவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரசாயன திணைக்கள பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளியானதன் பின்னரே உயிரினங்களின் மரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
45 minute ago