2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

’சிப்ஸ்’ ஆல் இலங்கை பெரும் சாதனை

Simrith   / 2023 ஜூன் 01 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதலாவது, உருளைக்கிழங்கு சீவல் (Potato Chips) தயாரிப்பு தொழிற்சாலை முன்னோடியானது பெரும் வெற்றியளித்துள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

ரூ. 100 மில்லியன் செலவில் செயற்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் நோக்கமானது, உருளைக்கிழங்கை பெறுமதி மிக்க பொருளாக சந்தைக்குக் கொண்டு வருவதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள சில உணவு பதப்படுத்தும் நிறுவனங்களால் உருளைக்கிழங்கு சீவல்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 2021 ஆம் ஆண்டில் அதற்கான மொத்த செலவு ரூ. 21 பில்லியன்களாகும். தற்போது சில தனியார் நிறுவனங்களால் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

2021 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி, இந்நாட்டில் தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சீவல்கள் 6, 321 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

கஹட்டவெல உருளைக்கிழங்கு சீவல் தொழிற்சாலையின் தயாரிப்புகள் உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதுடன் உள்நாட்டு தேவைக்கும் விநியோகிக்கப்படவுள்ளது.

ஒரு நாளில் 1,000 கிலோ கிராம் சிப்ஸ்களைத் தயாரிக்கக் கூடிய இயலுமை இந்தத் தொழிற்சாலைக்கு உள்ளது. மேலும் இந்த தொழிற்சாலைக்கு 200 உருளைக்கிழங்கு விவசாயிகளின் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .