2021 ஒக்டோபர் 20, புதன்கிழமை

மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Nirosh   / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக அரசாங்கம் வருமானத்தை இழக்காதிருக்க, மதுபான போத்தல்களை ஒன்லைனில் விற்பனை செய்வதற்கு விரைவில் இலங்கை மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்க உள்ளது.

கொரோனா வைரஸ்க்கான ஊரடங்கு காலத்தில் மதுபான போத்தல்களை ஒன்லைனில் விற்பனை செய்வதற்கான பொறிமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக  அத்திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஜே.குணசிரி விடுத்துள்ள சுற்றுநிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்களை கொள்வனவு செய்வதற்காக மதுபானசாலைகளுக்கு முன்பாக ஒன்றுகூடுபவர்களை சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியாமல் போவதாகவும், இதனால் புதிதாகக் கொரோனா கொத்தணிகள் ஊருவாகுவதற்கான வாய்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் கறுப்பு சந்தைகளில் சாராயத்தின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கும் அவர், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதும் சிரமமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X