2022 ஜனவரி 25, செவ்வாய்க்கிழமை

’நான் ஒரு ஆசிரியர்; செய்தியாளர் இல்லை’

Freelancer   / 2021 டிசெம்பர் 03 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்சிக்கோ, தமக்கோ எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாத திருத்தப்பட்ட செய்திகளை மட்டுமே தாம் ஊடகங்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தன்னைத் தான் ஆசிரியராகக் கருதுவதாகவும் செய்தியாளராகக் கருதவில்லை என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டங்கள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டதால் முன்னாள் பெண் ஜனாதிபதி, தன்னை ஒரு செய்தியாளராக ஒப்பிட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அலரிமாளிகையில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறித்த விடயங்களை பிரதமர் வெளியிட்டார்.

ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஊடகவியலாளர்கள் கருவியாக இருக்க முடியும் என்றாலும், அவர்களால் அதைப் பாதுகாக்க முடியாது. ஏனெனில் அதை நிர்வாகிகளால் மட்டுமே செய்ய முடியும் என்றும் பிரதமர் கூறினார்.

ஊடகவியலாளர்கள், அரசாங்கத்தைப் பாதுகாக்க வேலை செய்தால், அவர்களுக்கு இப்போது வழங்கப்படுவதை விட பெரிய காப்புறுதித் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த காரணியை ஊடகவியலாளர்கள் புரிந்து கொண்ட போதிலும், சிலர் இதனைப் புரிந்து கொள்ளாதது துரதிர்ஷ்டவசமானது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X