Nirosh / 2021 டிசெம்பர் 07 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்துக்கிடமான காரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸார் சோதனையிட முயன்றுள்ளனர்.
இதன்போது காரில் இருந்த சந்தேகநபர் காரை திடீரென கொழும்பு நோக்கி செலுத்தியுள்ளார்.
உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிஸார் காரை வேகமாகத் துரத்தி சென்று காரின் டயர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி சந்தேகநபரை மடக்கிப்பிடித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது காரில் 21 வயதுடைய இளைஞனும், 8 வயது சிறுவன் இருந்ததாகவும், மேலும் காரிலிருந்து 138 கிராம் ஐஸ், 290 கிராம் கஞ்சா ஆகிய போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தனது போதைப்பொருள் வர்த்தகத்துக்கு சிறுவனை சந்தேகநபர் பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதோடு, மேலும் ஒருவரையும் போதைப்பொருளுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் இம்மாதம் 06ஆம் திகதி இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025