Freelancer / 2021 ஜூலை 26 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாதிய உத்தியோகத்தர் ஒருவரை பீங்கான் கோப்பையால் தலையில் தாக்கிக் காயப்படுத்திய பிக்கு ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் கொரேனா பிரிவில் கடமையாற்றும் தாதியொருவரே மேற்குறிப்பிட்ட தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் கொண்டு செல்லப்பட்டதாகவும் ஆனமடுவ ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி பத்மினி அபேரத்ன தெரிவித்தார்.
பி.சி.ஆர் பரிசோதனையின் போது ஏற்பட்ட வலியின் காரணமாக பரிசோதனை செய்த தாதியை குறித்த பிக்கு தாக்கியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
26 Oct 2025