2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

அடைக்கல இல்லங்களுக்கு ரூ. 1,000 மில்லியன் செலவு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 21 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம், வெளிநாடுகளில் இலங்கைத் தூதரகங்கள் ஊடாக நடத்தும் அடைக்கல இல்லங்களுக்காக, இவ்வருடம் மாத்திரம் 1 பில்லியன் ரூபாயைச் செலவளித்துள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோறள தெரிவித்தார்.

இலங்கை வேலையாட்களுக்கு மருத்துவ உதவி, வேலைக்குச் சென்ற நாட்டில் மறியலில் உள்ளவர்களுக்கு சட்ட உதவி, அவர்களை விடுவிக்கும் முயற்சிகள் என்பவற்றுக்காக, இந்தப் பணம் செலவளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற இடத்தில் இறந்து போன அல்லது வலுவிழந்து போனவர்களுக்கு நட்டஈடு காசோலை வழங்கும் நிகழ்வு, வெளிநாட்டு அலுவர்கள் அமைச்சில், செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜோர்தான், லெபனான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், குவைத், ஓமான் ஆகிய நாடுகளில் மரணமடைந்த அல்லது வலுவிழந்த 39 குடும்பங்களுக்கு, 72 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவும், இந்நிகழ்வின் போது காகோலைகளை வழங்கி வைத்தார்.

இவ்வாறு காசோலை வழங்கி வைக்கும் 5ஆவது நிகழ்வு இதுவாகும். இவ்வருடம், 196 பேருக்கு 345 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .