2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

அதிவேகமாக தப்பியவர் சரணடைந்தார்

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், களனிகம பிரதேசத்தில் நுழைவாயிலுக்கு சேதம் ஏற்படுத்தி, துரத்தி வந்த பொலிஸ் அதிகாரியின் மோட்டார் வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதி, சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழ​மை தெரிவித்தனர்.

விபத்தின் பின்னர், மோட்டார் வாகனம் புதுப்பிக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்கள் உள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர், பாணந்துறை, மகவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்  என்றும் ஓய்வுப்பெற்ற விமானப்படை வீரர் என்றும் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை ஹொரணை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .