2021 ஜூலை 31, சனிக்கிழமை

மைத்திரியை தூசித்த சந்தேகநபர் சரணடைந்தார்

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக களமிறங்கிய இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் முகப்புத்தகத்தின் ஊடாக பொய்க்குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிரதேச சபை உறுப்பினர், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

பெண்ணொருவரை தொடர்பு படுத்தியே அவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தரவேற்றம் செய்துள்ளார்.

அந்த சந்தேகநபரை இரகசிய பொலிஸார் தேடிக்கொண்டிருந்த நிலையில், காலி பிரதேச சபை உறுப்பினராக சம்பத் அத்துகோரளை, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இன்று வியாழக்கிழமை ஆஜரானார்.  
நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவின் சகிதமே நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .