2021 ஜூலை 31, சனிக்கிழமை

இடம்பெயர்ந்து வாழும் தமிழர் நிலை;இந்திய தூதுக்குழு ஜனாதிபதி சந்திப்பு

Super User   / 2009 ஒக்டோபர் 14 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய நாடாளுமன்றக்குழுவினர் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை அலரி மாளிகையில்  சந்தித்து அகதி முகாம்களில் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நிலைமை குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தமது திருப்தியை வெளிப்படுத்தினர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,தமக்கு அழைப்பு விடுத்தமைக்காகவும்,இடம்பெயர்ந்த மக்களை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தமைக்காகவும்,ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை குறித்தும் தூதுக்குழுவினர் நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை பாராட்டும் அதேவேளை இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பணிகளை துரிதப்படுத்துமாறும் தூதுக்குழு கோரிக்கை விடுத்தது.

நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் பூத்தியடைந்ததும் மீள்குடியேற்றம் இடம்பெறும் என ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .