2021 ஜூலை 28, புதன்கிழமை

இலங்கை தமிழருக்கு மறுவாழ்வு அளித்தல் இந்திய அரசின் கொள்கை - நாராயணசாமி

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதையே இந்திய அரசு முக்கிய கொள்கையாக கொண்டு செயற்படுகிறது என, மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு தேவையான பணிகளை இந்திய அரசு அந்நாட்டுடன் சேர்ந்து முன்னெடுத்து வருகிறது. நிவாரணப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றதா என்பதையும் மத்திய அரசு தொடர்ந்தும் கவனித்து வருகிறது.

இலங்கையில் தமிழர்கள் மீள்குடியேற்றப்படும் இடங்களில் இந்திய அரசு 500 கோடி ரூபாய் செலவில் சுமார் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளது.  இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதையே இந்திய அரசு முக்கிய கொள்கையாக கொண்டு செயற்படுகிறது.

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டித் தருமாறு அந்நாட்டு அரசை இந்தியா வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .