2021 ஜூலை 31, சனிக்கிழமை

இரு மேஜர் ஜெனரல்கள் விடுவிக்கப்படுவர்

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.செல்வநாயகம்)

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்களான காமினி உபாலி பண்டார எதிரிசிங்க மற்றும் சுனில் அமரவன்ஸ டி சில்வா ஆகியோர் இன்னும் இரு வாரங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதியரசர்களான சிரானி திலகரட்ன மற்றும் ஐ.இமாம் ஆகியோரைக் கொண்ட நீதிபதிகள் குழாம் எதிர்வரும் ஒக்டோபர் எட்டாம் திகதி மீண்டும் விசாரிக்கப்படும் என அறிவித்தது.

மேற்படி இரண்டு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்களும் அரசாங்கத்திற்கெதிராக மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவினாரால் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிராக இவர்கள் இருவராலும் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவர்கள் இருவரும் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்காக தேர்தல் பிரச்சார பணியில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் மேஜர் ஜெனரல் எதிரிசிங்க சார்பில் உபுல் ஜெயசூரியவும், மேஜர் ஜெனரல் சுனில் அமரவன்ஸ சார்பில் ஜெ.சீ.வெலியமுனவும் சட்டமா அதிபர் சார்பாக சிரேஷ்ட அரச சட்டத்தரணி றியாஸ் ஹம்சாவும் ஆஜராகினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .