2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

லங்கா ஈ நியூஸ் செய்தி ஆசிரியர் விடுவிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 07 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பென்னட் ரூபசிங்க இன்று கடுவெல நீதிமன்ற நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் 300,000 ரூபா சரீரப் பிணையிலும் 10,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் விடுதலையானார்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின்போது இடையூறு ஏற்படுத்தக் கூடாதெனவும் அவருக்கு, கடுவெல நீதிமன்ற நீதவான் ஜே.டி.அல்விஸ் எச்சரித்தார்.

இவரது வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மாலபேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரின் சகோதரரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் வாக்குமூலமளிப்பதற்காக வருமாறு பென்னட் ரூபசிங்கவுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர். (DM)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .