2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

ஓவியர் தேவகுமாரின் அழகிய ஓவியங்கள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)
நமது நாட்டில் பல்வேறு கலைஞர்கள் உள்ள போதும், அவர்களில் அதிகமானோரின் திறமைகள் இலைமறை காயாகவே இருந்து வருகின்றன. சந்தர்ப்பமும், அதிஷ்டமும் ஒன்று சேரும் போதுதான் இவ்வாறானவர்களின் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியவருகின்றன.

ஊடகங்களின் பார்வையில் பட்டுவிடும் திறமைசாலிகள் - உலகின் வெளிசத்துக்கு வந்து, அடையாளங்களையும் பெற்றுவிடுகின்றனர்.

அந்தவகையில், நமது பார்வையில் சிக்கிய தேவகுமார் எனும் ஓவியரின் திறமையினை வெளிச்சப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சி கொள்கின்றோம்.

கணபதிப்பிள்ளை தேவகுமார் எனும் இந்த இளம் ஓவியர் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரைதீவுப்பற்று – பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மண்டூர் - பாலமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

தனது 13 ஆவது வயதிலிருந்து ஓவியங்களை வரைந்து வரும் இவர் - எளிமையானதொரு குடும்பப் பின்னணியினைக் கொண்டவராவார்.

திறமைக்கு வறுமை தடையில்லை என்பார்கள். அதற்கிணங்க, தேவகுமார் தனது ஓவியத் திறமையினை வளர்த்துக் கொண்டே வருகின்றார்.

இயற்கைக் காட்சிகள், நமது நாட்டின் அரசியல் தலைவர்கள், உலகப் பிரபலங்களையெல்லாம் தேவகுமார் தனது தூரிகையினால் மிகவும் தத்துரூபமாக வரைந்து தள்ளுகின்றார்.

ஓவியம் வரைதலையே தனக்கான வாழ்வாதாரத் தொழிலாகவும் ஆக்கிக் கொண்டுள்ள   தேவகுமார் இதன் மூலம் மாதாந்தம் ஓரளவு வருமானத்தினையும் பெற்றுக்கொள்கின்றார். 
 

தேவகுமாரின் கை வண்ணத்தில் பிறந்த ஓவியங்கள் சில...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .