2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

'முகம்மது நபிகள்' வாழ்க்கை வரலாற்று நூலுக்கான கைப்பிரதி போட்டியில் கவிஞர் அல் அஸுமத் முதலிடம்

Kogilavani   / 2012 ஜனவரி 06 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

தமிழ்நாடு, சென்னை, ரஹ்மத் அறக்கட்டளையினால் நடத்தப்பட்ட முகம்மது நபிகள் (ஸல்) வாழ்க்கை வரலாற்று நூலுக்கான கைப்பிரதிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கவிஞர் அல் அஸூமத் முதற் பரிசைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

முகம்மது நபிகள் (ஸல்) வாழ்க்கை வரலாறு, முஸ்லிம் அல்லாதாரும் படிக்கும் வகையில் அழகுத் தமிழில் ஆய்வு நடையில் வரலாற்று ஆதாரங்களோடு எழுதப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு ரஹ்மத் அறக்கட்டளை அறிவித்திருந்தது.

உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட இப்போட்டியில் கவிஞர் அல் அஸுமதின் நூல் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

நாடறிந்த கவிஞரும் எழுத்தாளருமான கவிஞர் அல் அஸூமத் கடந்த 2002ம் ஆண்டு தமது 'வெள்ளை மரம்' என்ற சிறுகதை நூலுக்கான தேசிய அரச சாஹித்திய விருதையும் 'சிரித்திரன் சுந்தர் நினைவு' விருதையும் பெற்றவர்.

அவரது 'புலராப் பொழுதுகள்' குறுங்காவியநூல் 1984ல் முஸ்லிம் எழுத்தாளர் தேசியக் கவுன்சில் விருதையும் 'அறுவடைக் கனவுகள்' நாவல் கடந்த ஆண்டு தமிழியல் விருதையும் பெற்றன. இவரது 'குரல் வழிக் கவிதைகள்' என்ற நூலுக்கு யாழ். இலக்கிய வட்டம் 2009 இல் மிகச் சிறந்த கவிதை நூலுக்கான விருதை வழங்கியது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் நான்கு வருடங்களுக்கும் மேலாக இவர் நடத்தி வந்த 'கவிதைச் சரம்' நிகழ்ச்சி பல கவிஞர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது. தொலைக் காட்சி, வானொலி, மேடைக் கவியரங்குகள் பலவற்றில் தலைமை வகித்த அனுபவமிக்க கவிஞரான கலாபூஷணம் அல் அஸூமத் முஸ்லிம் கலாசார பண்பாட்டலுவல்கள் ராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வரால் 'கவித் தாரகை' விருது வழங்கியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கலைஞர் முன்னணியினரால் 2008ம் ஆண்டு 'இலக்கிய சாகரம்' பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டவர்.

கடந்த ஆண்டு காயல்பட்டினத்தில் தமிழ்நாடு இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய 13ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் 'தமிழ் மாமணி' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்ட மூன்று இலங்கையருள் கவிஞர் அல் அஸூமத்தும் ஒருவர் ஆவார்.  (அஷ்ரஃப் சிஹாப்தீன்)


  Comments - 0

 • Rizwan, KBK Sunday, 08 January 2012 07:00 AM

  சலாம், எனது வாழ்த்துக்கள் உங்கள் கலை வாழ்க்கை மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும்.
  கும்புக்கந்துரை, ரிஸ்வான்.

  Reply : 0       0

  sirajdeen siromgk Sunday, 08 January 2012 04:38 PM

  வாழ்த்துக்கள் ,, இன்னும் உங்கள் கலை பயணம் தொடர என் அன்பான வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  madani Tuesday, 10 January 2012 05:09 AM

  வாழ்த்துக்கள்.
  - மதனி

  Reply : 0       0

  ibnuaboo Wednesday, 11 January 2012 01:53 AM

  இன்றைய செய்திகளில் முதன்மையானதும் என்னை பரவசப்படுதியதும் கௌரவ அல் ஆஸுமத் அவர்களது நபிகளாரின் வரலாற்று நூலுக்கான பரிசுபெற்ற செய்தியாகும். கவிஞரே உங்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். உடல் ஆரோக்கியத்துடன் மேலும் இவ்வாறான இலக்கியப் பயணம் தொடர பிரார்த்திக்கிறேன். புலிக்குப் பிறந்தது பூனையாகாது.

  Reply : 0       0

  mohamed Thursday, 12 January 2012 12:32 AM

  மாஷா allah vaalthukkal

  Reply : 0       0

  najath Friday, 13 January 2012 03:05 AM

  வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  halith MB Friday, 18 May 2012 02:13 PM

  வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  shafeek Zubair Tuesday, 29 May 2012 05:07 AM

  வாழ்த்துக்கள்

  Reply : 0       0

  aishwarya Friday, 31 August 2012 12:30 PM

  வாழ்த்துக்ககள் அல் அஸூமத்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X