2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

பல்துறை சித்தானந்த வித்தகர் கதிர் சரவணபவன் காலமானார்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (நவரத்தினம்)
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் வவுனியாவில் வசித்தவருமான சித்தாந்த வித்தகர் கதிர் சரவணபவன் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று வவுனியாவில் காலமானார்.

60 வயதான இவர் சிறந்த சொற்பொழிவாளராகவும் கவிஞர், எழுத்தாளர், பொய்க்கால் குதிரையாட்டவீரர், வில்லிசைக்கலைஞர் என்ற பல துறைகளில் தன்னை ஈடுபடுத்தி கலைச்சேவை செய்திருந்தார்.

இதேவேளை, வெளிநாடு மற்றும் உள்நாட்டு ஆலயங்கள் பலவற்றிற்கு ஊஞ்சல் பாட்டும் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவரது கலைச்சேவையை பாராட்டி கலைமணி, கலைச்சுடர், முத்தமிழ் கலைச்சுடர், சித்தாந்த சிகரம் ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவர் வவுனியா பிரதேச கலாசார பேரவையின் மூத்த உறுப்பினருமாவார்.

இவரினால் அண்மையில் பாடசாலை மாணவர்களுக்குரிய நான்மணிகடிகை என்ற நூலை; எழுதி வெளியிடப்பட்டிருந்தது.

இவர் இலங்கை தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்த முதுதமிழ் புலவர் மு. நல்லதம்பியின் மூத்தபேரனும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலாளரின் மூத்த சகோதரருமாவார்.

இவருடைய இறுதிக்கிரியைகள் நாளை வவுனியாவில் இடம்பெறவுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X