Editorial / 2019 ஒக்டோபர் 08 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கும் யோசனையொன்று இன்று (08) முன்வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல ஊடாக இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
அதற்கமைய 23ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 7.30 மணிவரை சபை நடவடிக்கைகயை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதத்தின் முதலாவது சபை அமர்வு இன்று (08) ஆரம்பிக்கவுள்ளதுடன், 2019.09.20 ஆம் திகதிய 99ஆம் இலக்க நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் 18 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும், பொது ஒப்பந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Nov 2025
20 Nov 2025
20 Nov 2025