2022 ஜனவரி 18, செவ்வாய்க்கிழமை

28 நாள் சிசுவுக்கும் ’’மிஸ் என்’’ தொற்றும்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்களில் கொரோனா தொற்றுக்கு பின்னர் ஏற்படுகின்ற Mis-C பற்றி முன்னர் அறிவுறுத்தியிருந்தோம். Mis C யானது சிறுவர்களின் பல அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதை போன்றே Mis- N பிறந்து 28 நாள்களுக்குள்ளான சிசுகளின் பல அங்கங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஆபத்தானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஸ்ட விரிவுரையாளரும்,மட்/போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான வைத்திய கலாநிதி வைத்தியர் .விஜி திருக்குமார் மேலும் தெரிவிக்கையில், சமகாலத்தில் குழந்தைகளைப் பாதிக்கும்"மிஸ்சி ";பற்றி அறிந்துகொள்வதற்கு இடையில், "மிஸ்என்" என்ற
புதியவகைத்தொற்றும்  தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது .

MIS - N (Neonatal Multisystem Inflammatory Syndrome) என்பது அதன் விரிவாக்கம். கொவிட் - 19 தொற்றுக்கு உள்ளான தாயின் தொப்புள் கொடியின் மூலமாக கடத்தப்படுகின்ற பிறபொருள் எதிரி அல்லது நிணநீர் தொழிற்பாட்டின் பிறழ்வு செயற்பாடு குழந்தைகளின் உடலில் பல
அங்கங்களில் பிறந்து 28 நாள்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதன் மூலமாக பிள்ளைகளின் .இதயம் பெரும்பாலான (90%) தாக்கத்தை (இதய தொழிற்பாடு இதய குழாய்கள்) ஏற்படுத்துகிறது. நுரையீரல் , சுவாசப் பிரச்சினைகள், காய்ச்சல், பாலூட்டலில் சிரமம், சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பிரச்சினைகள், பிள்ளை சோர்வாக காணப்படல், பிள்ளை மஞ்சளாகி காணப்படல் உள்ளிட்டவற்றை அவதானிக்க முடிவதுடன் சிறு சதவீதமான உயிரிழப்பும் அவதானிக்கப்படுகிறது என்றார்.

சிறு பிள்ளைகளில் குறிப்பாக 28 நாள்களுக்கு உட்பட்டவர்களின் உடல் நிலையில் மேலதிக கவனம் எடுத்து பார்ப்பதுடன் பிள்ளைகளின் உடல் நிலையில் ஏதேனும் அசௌகரியத்தை அவதானித்தால் உடனடியாக அரச வைத்தியசாலைகளை அணுக வேண்டும் என்றும் வைத்திய நிபுணரான வைத்திய கலாநிதி வைத்தியர் .விஜி திருக்குமார் மேலும்
அறிவுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X