Nirosh / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவடைந்ததும், 18 - 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் 40 இலட்ச சினோபார்ம் தடுப்பூசிகள் இந்த வார இறுதிக்குள் கிடைக்கும். பைசர் அல்லது மொடோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாமென பலர் சினோஃபார்ம் தடுப்பூசிகளை தவிர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கும் தடுப்பூசிகளை செலுத்தாது தவிர்த்துக்கொள்ள வேண்டாமெனவும், அருகில் உள்ள தடுப்பூ மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச சேவையாளர்கள் அறிவார்ந்தவர்கள் என்பதால், தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி பணிகளை மேற்கொள்வார்கள் என்பதாலேயே, அரச அலுவலகங்களை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

7 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
15 Nov 2025