2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

‘கட்டுக்குள் அடங்கும் வரை தளர்த்த வேண்டாம்’

Editorial   / 2021 மே 31 , மு.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


கொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவுவதைத் தடுக்கும்
வகையிலும் கொரோனா வேலைத்திட்டங்களுக்கு அமைவாகவும் தற்போது
பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வரையிலும் அக்கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டாம் என விசேட வைத்தியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாடு என்ற ​வகையில், பொருளாதார ரீதியில் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கவேண்டி வரும். அதனால் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் நேர்மறையான தாக்கத்தையும் குறைத்து மதிப்பிட முடியாதென அச்சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதேபோல, சுகாதாரப் பிரிவினால் விடுக்கப்படும் கோரிக்கை அமைவாக,
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர், நாடாளாவிய ரீதியில் பயணக்
கட்டுப்பாடுகளை விதித்தமையை மிகவும் உயர்வாக மதிக்கின்றோம் என்றும்
அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லையெனில், நாட்டின்
பல்வேறான பிரதேசங்களிலிருந்து ​கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு
தொற்றாளர்கள் கொண்டுவரப்படுவர். இதனால், சுகாதாரத் துறையினரின்
​சேவைகள் சீர்குலைந்துவிடும்.

அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின் கொரோனா தொற்றாளர்கள் பலர் மரணமடைவதற்கான சாத்தியக்கூறுகளும் இருந்திருக்கும் என்றும் அவ்வறிக்கையில் மேலும்
குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .