Princiya Dixci / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

- கனகராசா சரவணன், வா.கிருஸ்ணா
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம், பொலிஸாரின் சமிக்கையை மீறி பயணித்தமையால், அதன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம், மட்டக்களப்பு - கரடியனாறு, பங்குடாவெளிச் சந்தியில், இன்று (12) அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து, உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது, குறித்த உழவு இயந்திரத்தை பொலிஸார் நிறுத்த முயற்சித்துள்ளனர். எனினும், பொலிஸாரின் சமிக்கையை மீறி உழவு இயந்திரம் சென்ற நிலையில், பொலிஸார் அதனை துரத்திச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, உழவு இயந்திரம் மீது மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், அதில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய எஸ்.துசாந்தன் என்பவரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Mar 2026
12 Mar 2026