Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 நவம்பர் 27 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வங்கியின் அண்மைய மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் உணவுப் பணவீக்கம் 86 சதவீதமாக உள்ளதுடன், கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியான அறிக்கையில் இலங்கை 5ஆவது இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
321 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் சிம்பாப்வே முதலாம் இடத்திலும் முறையே 208 மற்றும் 158 சதவீத பணவீக்கத்துடன் லெபனான் மற்றும் வெனிசுவேலா ஆகிய நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் உள்ளன.
99 சதவீத பணவீக்கத்தைக் கொண்டுள்ள துருக்கி ஐந்தாம் இடத்திலும் 87 சதவீத பணவீக்கத்தை கொண்டுள்ள ஆர்ஜன்டீனா ஆறாம் இடத்திலும் உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
7ஆம் 8ஆம் 9ஆம் 10ஆம் இடங்களை முறையே ஈரான், ருவாண்டா, சுரினாம், லாவோஸ் ஆகியவை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு அளவிடப்படும் இலங்கையின் முதன்மை பணவீக்கம் 70.6% ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், அண்மையில் அறிவித்தது.
செப்டெம்பர் மாதத்தில் 73.7 சதவீதமாக உயர்ந்து காணப்பட்ட பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 70.6 சதவீதமாக குறைந்துள்ளதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
30 minute ago
54 minute ago