2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

என் தங்கைக்கு ஆங்கிலம் தெரியாது ; அண்ணன் தெரிவித்தார் (தமிழ்மிரர் பேஸ்புக் கருத்துக்களும் இணைப்பு)

Editorial   / 2021 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தங்கையான ஹிஷாலினிக்கு, ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை என, மரணமடைந்த டயகம சிறுமியின் சகோதரன் தெரிவித்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த ஹிஷாலினி ஜூட், அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் வித்தியாலயத்தில் 7ஆம் வகுப்பு வரையில் மட்டுமே கல்விப்பயின்றார்.

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டபோது, எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவர் தங்கவைக்கப்பட்ட அறையில், ஆங்கிலத்தில், ‘எனது மரணத்துக்கு காரணம்” என எழுதப்பட்டுள்ளது, இதுதொடர்பில் கேட்டபோதே ஹிஷாலினியின் சகோதரன் திருபிரசாத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எனக்குத் தெரிந்தவகையில், ஏதாவது ஒன்றை பார்த்துகொண்டு எழுதும் திறமை எனது தங்கையிடம் இருக்கிறது. ஆனால், ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வகையில் எனது தங்கைக்கு ஆங்கில அறிவு இருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .