2023 ஜூன் 07, புதன்கிழமை

அன்னையர்களுக்கு பரிசளிப்போம்

Editorial   / 2018 டிசெம்பர் 16 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண வாழ்வுக்குள் நுழைந்துவிட்ட அநேகமான பெண்கள், கனவுகளைத் தகர்த்துவிட்டு, தனது பிள்ளைகளுக்காகவும் கணவனுக்காகவும் மட்டுமே வாழப் பழகிவிடுவர். இதையே, சமூகமும் கற்றுக்கொடுத்துள்ளது. பல கனவுகள், இலக்குகளுடன் தனக்கேயான ஓர் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்கள், திருமணம் என்று வந்தவுடன் மற்றுமோர் உலகத்துக்குச் சென்றுவிடுகின்றனர்.   

அங்கு அவர்களால் கனவுகளைக் காண முடியாது. பிள்ளைகளே அவர்களது கனவு, எதிர்காலம், இலட்சியம். இதைத் தாண்டி, தமக்கேயான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர்கள் நூற்றில் 30 சதவீதமான பெண்களே.   
மீதமுள்ள 70சதவீதமான பெண்கள், இன்னும் வீட்டு வேலைக்காரிகளாகவே உள்ளனர். மனித வேலை நேரத்தையும் தாண்டி மேலதிகமாக, ஊதியமின்றி உழைக்கும் பெண்கள் அனைவரும் “வீட்டில் சும்மா” இருப்பதாகவே கருதப்படுகிறது. இவ்வாறு வீட்டில் சும்மா இருக்கும் பெண்களுக்கு, விசேட தினங்களில் குறிப்பாக அவர்களது பிறந்த தினத்தில், அன்னையர் தினத்தில், பண்டிகை தினங்களில் பரிசளிக்க விரும்புகிறீர்களா? பெண்களுக்கு அவர்களுக்கு பிறந்த தினத்தின் இலக்கத்துக்கு ஏற்ப எத்தகைய பரிசுகளை வழங்கலாம்?   

இலக்கம் 1

உங்களது அன்னை 1, 19 அல்லது 28 ஆகிய திகதியில் பிறந்தவராயின், அவர் அநேகமாக ஆடைப் பிரியராக இருப்பார். சேலை, சல்வார் போன்ற ஆடைகளை அவருக்குப் பரிசளியுங்கள். குறிப்பாக சிவப்பு, ஒரேஞ் நிறத்திலான ஆடைகளை இவர்கள் அதிகம் விரும்புவர்.   

இலக்கம் 2

எண் 2, 11, 20 ஆகிய திகதியில் பிறந்தவர்கள் நகைப் பிரியராக இருப்பர். இவர்களுக்கு தங்கம், முத்து, படிகம், வெள்ளியிலான நகைகளைப் பரிசளிக்கலாம்.   

இலக்கம் 3

3, 12, 21, 30 ஆகிய எண்களில் பிறந்தவர்கள், உணவு விரும்பிகளாக இருப்பர். எனவே இவர்களுக்கு வியப்பளிக்கும் வகையில், இரவு அல்லது மதிய உணவுக்கு வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.   

இலக்கம் 4

4,22, 31 ஆகிய எண்களில் பிறந்தவர்கள், கைக்கடிகாரப் பிரியர்களாக இருப்பர். எப்போதும் விதமான கைக்கடிகாரங்களை அணிவதில் பேராசை கொண்டவர்கள். எனவே, இவர்கள் விரும்பும் வகையிலான கைக்கடிகாரங்களைப் பரிசளியுங்கள்.   

இலக்கம் 5

5, 14, 23 ஆகிய எண்களில் பிறந்தவர்கள், பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவதையே அதிகம் விரும்புகின்றனர். எனவே, அவர்கள் விரும்புவதைப் போன்று உங்களது நேரத்தை அவர்களுக்காக ஒதுக்கி அவர்களுடன் பொழுதைப் போக்குங்கள்.   

இலக்கம் 6

6, 15, 24 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் சமைப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள். எனவே, இவர்களிடமிருந்து சமைப்பதற்குப் பழகிக்கொள்ளலாம். சமைப்பதில் ஆர்வத்தைத் தூண்டி வாய்க்கு ருசியான உணவுகளை உண்ணலாம். எனவே, சிறந்த உணவை உண்பதற்கான ஆர்வத்தை ஏற்படுத்துங்கள். உணவு சார்ந்த அன்பளிப்புகளை வழங்குங்கள்.   

இலக்கம் 7

இலக்கம் 7, 16, 25 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள். எனவே, அவர்களது ஆன்மீகப் பயணத்தைத் தூண்டும் வகையிலான தெய்வீக சிலைகள் என்பவற்றைப் பரிசளிக்கலாம்.   

இலக்கம் 8

8, 17, 26 ஆகிய எண்களில் பிறந்தவர்கள் செல்லம் கொஞ்சுவதற்கு விருப்பம். தலையை வருடி விடுதல், அருகில் இருந்து கதை கூறி மகிழுதல், ஒன்றாக இருந்து படம் பார்த்து மகிழுதல் போன்ற செயற்பாடுகளை இவர்கள் அதிகம் விரும்புவர். எனவே, அதற்கேற்றாற் போன்று இவர்களுக்கு நேரத்தை ஒதுக்கவும்.   

இலக்கம் 9

9,18,27 ஆகிய எண்களில் பிறந்தவர்கள், பயணப் பிரியர்கள். குடும்ப உறவுகளுடன் நீண்ட தூரம் பயணம் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். எனவே, அவர்கள் பிரியப்படும் வகையில் நீண்ட தூரத்துக்கு அழைத்துச் செல்லவும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .