2023 ஜூன் 10, சனிக்கிழமை

நுவரெலியாவை பிரதிபலிக்கும் வகையில் உ.கிழங்கு ​புடின்

Editorial   / 2019 ஏப்ரல் 16 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

நுவரெலியா மாவட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலும், நுவரெலியா மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகளின் விளைச்சலை எடுத்துகாட்டும் விதமாகவும், நுவரெலியா மாவட்ட கிரான் ஹோட்டலால், உருளைக்கிழங்கு புடின் செய்யப்பட்டது.

நேற்று (16) இடம்பெற்ற இந்நிகழ்வில், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குறித்த புடினானது, 15 கிலோகிராம் உ.கிழங்கு, 2.5 கிலோகிராம் சீனியையும் கொண்டு, கிரான் ஹோட்டலின் 15 ஊழியர்களால் தயாரிக்கப்பட்டது.

​மேலும் குறித்த ஹோட்டலில் கடந்தாண்டு பெருமளவிலான சொக்கலட் கேக் ஒன்றும் தயார் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .