Editorial / 2018 ஒக்டோபர் 24 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எங்களது புற உலகச் செயல்கள் இந்த உடம்புக்கானது. ஆனால், அறிவு, ஞானம், விழிப்பு நிலை ஆன்மாவுக்கானது.
எனவே, ஆன்ம துரோகம் ஆபத்தானது. நல்ல வழியில் உலக பயணத்துக்கான தேடல்களை என்றும், எப்பொழுதும் சத்தியமான சிந்தனைகளை உருவாக்கிடுக அன்பர்களே. அறத்தை வெறுத்து, வாழ்பவர்களிடத்தில் சிறப்பான எண்ணங்களை உருவாக்க முடியாது.
மனிதர்களால் தொடர்ந்து, அன்புடன் வாழ முடியாதுள்ளது. ஆத்திரம், விரோதம், வன்மம் நிறைந்த மனநிலைகள் அடிக்கடி வந்துவிடுகின்றன. இதனாலேயே பேரிடர்களைச் சந்தித்த வண்ணம் உள்ளனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, அன்புடன் இணைந்து கொண்டவர்களால்க்கூட, ஒருவர் செய்த சிறு தவறை, மன்னித்துவிட மற்றையவர் சம்மதிப்பதில்லை.
வெறும் சடப்பொருள் அல்ல மனிதன். கட்டுப்பாடற்ற குரோதம் உள்நுழைந்து விட்டால், மிருகமாகி விடுகிறான். தூயசிந்தனை இல்லாமல் ஆன்ம மீட்சி, ஈடேற்றம் வந்துவிடாது. உள்ளத்தை ஒருமித்த நிலையில் பேணி, கள்ளமற்று வாழ்ந்திருக.
வாழ்வியல் தரிசனம் 24/10/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
5 hours ago
5 hours ago
04 Dec 2025
04 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
04 Dec 2025
04 Dec 2025